அறிவைப் பெருக்கு X+ ஆற்றலைக் கூட்டு
தனித்தன்மையை இழந்து வாழ்வியல் தரம், பொருளாதாரத்தில் மிகவும் பின்தள்ளப்பட்டனர். சமூகநீதி மறுக்கப்பட்டு கல்வியில் வறிய நிலைக்கு தள்ளப்பட்டனர் சுதந்திரம் கிடைக்கப் பெற்றும் முழுமையான சுதந்திரம் அனுபவிக்க இயலாத இம்மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட சீர் மரபினர் பட்டியலில் சேர்த்த பிறகு சிறிதளவு முன்னேறி வந்தாலும் கூட மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர் என்பதை உணர்ந்த பிறகு கல்வி கற்கும் திறன் இருந்தும் நிதியில்லாத காரணத்தினால் கல்வி கற்க முடியாமல் தத்தளிக்கும் மாணவர்களை கண்டறிந்து முழுமையாக நிதி உதவி செய்து அவர்கள் நினைக்கும் இலக்கை அடைய உதவிடவும், படித்த பட்டதாரி முதல் படிக்காத பாமரர் வரை சுய தொழில் செய்திட ஊக்குவித்து உயர்த்திடவும், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்திடவும் வேண்டும் என்ற முத்தான 3 கொள்கைகளை தன்னகத்தே கொண்டு 4.10.1992 - ம் ஆண்டு சிறிய அரங்கில் 10 நபர்களால் ஆலோசிக்கப்பட்டு,
"பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை" என்ற பெயரில் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டு 22.11.1992 -ல் அன்றைய தேவர் பேரவையின் தலைவர் திரு A.C.சீனிச்சாமித் தேவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டட்து. அன்றே அறக்கட்டட்ளையின் நிர்வாக அறங்காவலராக திரு M.பரமசிவம் அவர்களும், அறங்காவலர்களாக திரு M.மாரியப்பன்,B.A., திரு S.கஜேந்திரன், திரு V.சங்கரகோமதி, திரு M.சுந்தரராஜன், திரு U.சந்தானமுத்து,B.Sc., திரு K.கருத்தபாண்டியன், M.Sc., திரு. G.P. மணி திரு P.அங்கமுத்து, திரு M.சரக்குட்டி B.A., திரு A.சுப்பையா, B.Sc ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
07.02.1994 - ல் முறைப்படியாக இந்திய பதிவுச் சட்டப்படி கோவில்பட்டிட்யில் சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அதன்படி கொடை உள்ளம் கொண்ட நண்பர்களை புரவலர்களாக நியமிப்பது என்றும், அப்புரவலர்களில் ஆர்வம் உள்ளவர்களை தேவைக்கு ஏற்ப அறங்காவலர்களாக தேர்வு செய்து முறையாக பதிவு செய்துகொள்வது என்றும், அப்படி தேர்ந்து எடுக்கப்படுபவர்களுடைய பதவிக் காலம் 3ஆண்டுகளுடன் நிறைவு பெற்று விடும் என்றும், அறக்கட்டளை மூலமாக அரசை எதிர்த்தோ, ஆதரித்தோ ஊர்வலம், உண்ணாவிரதம், போராட்டங்கள் மற்றும் பொது இடங்களில் மேடை போட்டு கூட்டங்கள் நடத்துவது ஒருவருக்குள் ஒருவர் ஏற்படுகின்ற பிரச்சினைகளை பேசித் தீர்வு காண்பது, காவல் துறை மற்றும் அரசு சார்பு அலுவலகங்கள் ( கல்வித்துத்றை தவிர ) சென்று சிபாரிசு செய்வது போன்ற பணிகள் எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது என்ற விதிகளை உறுதியாக நடைமுறைப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்ற விதியினை ஏற்படுத்திக் கொண்டோம்.
மேற்கண்ட விதிகளின் படி அறக்கட்டளை ஆற்ற வேண்டிய அரும் பணிகள்
1. பள்ளிக்கல்வி மாணவர்களுக்கான நிதி உதவிகளை வழங்கி அவர்கள் அடைய நினைக்கும் இலக்கை அடைய உதவ வேண்டும்.
2. கல்வி நிறுவனங்கள் ஏற்பட முயற்சிக்க வேண்டும்.
3. எளிய, வறியவர்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று மருத்துவ முகாம் நடத்துதல் மற்றும் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
4. தொழில் முனைவோர்க்கு துணை புரிதல்.
5. ஆலயங்களில் அறப்பணிகள் செய்தல்.
6. ஆண்டு தோறும் அரசு பொதுத் தேர்விர்ல் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டுதல்.
7. சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து சமுதாய பெருமக்களை அழைத்துத் குறைந்தது ஆண்டுக்கு இரு நிகழ்ச்சிகளை நடத்துதல்.
“Every child is unique” We shall tap the potential in each child, Scholastic & Co Scholastic, to bring out the ‘hero’ in the child. Each child will be motivated & inspired to dream big & carve a niche for himself/herself.
Each child’s identity shall be so honed to change their Signatures into `Autographs’.
Curriculum Delivery will be different
Activity based, joyful, stress/ free learning.
Focus on development of motor skills
Learning by doing — eg -Block Printing, Khadi weaving, handmade paper, clay modeling, Best of waste etc .
Yoga & Theatre – Focus.
Sports — an integral part – shall be given due impetus.
NCC, NSS, Scouts, Cub, BulBul & Guides
Emphasis on Learning from the Environment — Green environment/ Botanical garden / Solar Energy .
Blend of Indian values & World Culture.
Focus on Child’s sense of inquisitiveness , exploration, urge for experimentation observation & synthesis
” 2 teachers “ and one helper for Kindergarten.
To provide quality technical & education.
To bring out the best in every-student by promoting a learning environment that provides appropriate state of the art technology and practices.
To develop professional skills and competencies in students, besides imparting valuable knowledge.
To honor the ethical, social and cultural values.
To create an environment where the students can develop the sphere of their knowledge broadens the horizon of their intellect & foster their cosmopolitan and cultural outlook.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்க்கு நிதி உதவி வழங்கி அவர்கள் வாழ்க்கைக்கு ஒளியேற்றி உள்ளது.
நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுயதொழில் செய்ய ஊக்குவித்துத் உதவி உள்ளது.
வரிய எளியவர்களுக்கு கண் மருத்துவம் மற்றும் பொது மருத்துத்வ முகாம் நடத்தி சிறப்பித்து உள்ளது.
பல ஆலயங்களில் அறப்பணிகள் செய்து, பல்லாயிரக்கணக்கான மக்களின் நன்மதிப்பை பெற்று உள்ளது.
ஆண்டு தோறும் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளித்து பாராட்டி உள்ளது.